திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இவ்விபத்து இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொட்டகலையிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும், அட்டனிலிருந்து கொட்டகலை பகுதியை நோக்கி சென்ற சிறிய ரக பஸ் ஒன்றும் நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி மட்டும் பலத்த காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தினால் சில மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்து தாமதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

19total visits,1visits today