உலகளாவிய ரீதியில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா வைரஸ் தொற்று ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் தேசிய சுகாதார ஆணைக் குழுவின் தலைவர் ஜாங் நன்ஷான் இந்த தகவலை கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்று நோய் முடிவடையும் அல்லது கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்ப்பதாக டாக்டர் ஜாங் நன்ஷான் கூறியுள்ளார்.

2019 டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 124 நாடுகளுக்கு பரவியுள்ள நிலையில் உலகளவில் 4,638 பேர் பலியாகியுள்ளனர்.

1,26,643 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் உருவாகிய கொரோனா இங்கு குறைந்து வரும் நிலையில் ஏனைய நாடுகளில் தற்போதுதான் பரவ ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனாவின் கோரம் இன்னும் 3 மாதங்களுக்கு நீடிக்கும் என்பது சற்று சோகமான செய்தி என்றாலும், எப்படியாவது ஒரு விடியல் கிடைக்கும் என்ற செய்தி சற்று மன அமைதியை ஏற்படுத்தியுள்ளது.

 

352total visits,1visits today