மன்னார்-மாந்தை சந்தியில் அமைக்கப்பட்டிருந்த திருக்கேதீஸ்வர ஆலயத்தின் அலங்கார நுழைவாயில் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான சந்தேக நபர்கள் சட்டத்தரணி ஊடாக இன்று ஞாயிற்றுக்கிழமை (24) காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் பிரசன்னமாகி இருந்தனர்.

அருட்தந்தை ஒருவர் உட்பட 10 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சட்டத்தரணி ஊடாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் பிரசன்னமாகி இருந்தனர்.

இவர்களில் மூன்று பெண்களும்,ஆறு ஆண்களும் அடங்குகின்றனர்.குறித்த 10 பேரிடமும் வாக்கு மூலத்தை பெற்றுக் கொண்ட மன்னார் பொலிஸார் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ அருட்தந்தையை சொந்தப் பிணையிலும், ஏனைய 9 பேரையும் 1 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையிலும் செல்ல அனுமதித்தார்.மீண்டும் இம்மாதம்; 29 ஆம் திகதிக்கு வழக்கு விசாரனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

40total visits,1visits today