போர்க் குற்றங்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் இருந்து இலங்கை அரசாங்கத்தை பிணை எடுக்கின்ற வேலையையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செய்து வருவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண அமைச்சருமான அனந்தி சசிதரன் இப்போது அரசாங்கம் பொய் உரைப்பதாகவும் ஏமாற்றி விட்டதாகவும் கூட்டமைப்பினர் கூறுவது வேடிக்கையானது என்றும் சாடியுள்ளார்.

யாழ்.சுழிபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்று சனிக்கிழமை காலை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அனந்தி சசிதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

33total visits,1visits today