மட்டக்களப்பு  வாழைச்சேனை பிரதேசத்தில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட ஒருவர் பொலிசார் மீது தாக்குதல் நடத்தியதில் பொலிஸ் சாஐன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து  நேற்று காலை 9 மணியளவில் குறித்த பிரதேசத்தில் உள்ள 26 வயதுடைய இளைஞன் ஒருவரரை பொலிசார் 2 கிராம் கஞ்சாவுடன் கைது செய்து அவரின் ஒரு கையில் விலங்கிட்டு விலங்கின் மறு பகுதியியை பொலிஸ்சாஜன் தனது கையிலிட்டாவாறு அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட் இளைஞனை பொலிஸ் நிலைய சிறைக்கூட்டில் அடைக்க முயன்றபோது இளைஞன் பொலிஸ்சாஜன்  மீது விலங்குடன் முகத்தில் தாக்குதல் நடத்தி இருவரும் கட்டிப்பிடித்து அடிபட்டதில் பொலீசாஜன்  படுகாயம் அடைந்ததையடுத்து வாழைச்சேனை வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

34total visits,2visits today