புத்தளம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 போர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து புத்தளம் – சிலாபம் வீதியின் நாகவில்லுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வேன் ஒன்றும் டிப்பர் ரக வாகனமொன்றும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

36total visits,2visits today