நீண்ட நாள்களாக கசிப்பு உற்பத்தி செய்யப்பட்ட இடம் முற்றுகையிடப்பட்டது. யாழ்ப்பாணம் அச்சுவேலி பெரிய பொக்கணை வாதரவத்தை காட்டுப்பகுதியை சுற்றிவளைத்த பொலிஸார் கசிப்பு உற்பத்தி செய்யும் இடத்தைக் கண்டு பிடித்தனர். வாதரவத்தையைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். சுற்றி வளைப்பில் 800 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி செய்யும் உபரணங்களும் கைப்பற்றப்பட்டன.

234total visits,2visits today