யாழ். அரியாலை – பூம்புகார் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் நோக்கில் சென்ற விசேட அதிரடிப்படையினர் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இந்நிலையில், தாக்குதலுக்குள்ளானவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

114total visits,2visits today