வவுனியா நெடுங்கேணிப் பகுதியில் வெடிக்காத நிலையில் இரண்டு மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நெடுங்கேணிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை நெடுங்கேணி ஜயனார் கோவிலுக்கு பின்புறமுள்ள காட்டுப்பகுதிக்கு இருவர் விறகு வெட்டுவதற்குச் சென்றுள்ளனர். இந்நிலையில் இரண்டு வெடிக்காத நிலையில் இருந்த இரண்டு மோட்டார் குண்டுகளை கண்டுள்ளனர். இதனை அடுத்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து விசேட அதிரடிப் படையினர் அக் குண்டுகளை செயலிழக்கச் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டனர்.

இதுதொடர்பில் தெரியவருவதாவது, மரம் ஒன்றில் இறுகிய நிலையில் இரண்டு மோட்டார் குண்டுகள் வெடிக்காத நிலையில் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து நெடுங்கேணிப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் புளியங்குளம் விஷேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து இன்றைய தினம் நீதிமன்ற அனுமதியைப் பெற்று இரண்டு குண்டுகளையும் செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

115total visits,1visits today