ஐக்கிய தேசிய கட்சியில் இணையப்போகின்றீர்களா என்ற கேள்வியை என்னிடம் கேட்பவர்களின் காதுகள் உடையும்படி காதைப்பொத்தி அறை விழும்   என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியிலோ அல்லது வேறு எந்த கட்சியிலோ சேரும் நினைப்பு இல்லையென பல தடவைகள் தெரிவித்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் நான் புறக்கணிக்கப்படுவதை காரணமாக வைத்து  என்னை ஐக்கிய தேசிய கட்சிக்குள் இணைப்பதற்கான முயற்சிகள் முற்காலங்களில் நடைபெற்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் எவ்வாறு ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் எனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தேனோ அதுபோலவே  ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியிலேயே எனது அரசியல் வாழ்க்கையை முடிக்க விரும்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

80total visits,1visits today