மன்னார் மனித புதைகுழியில் தோண்டியெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் 1499 முதல் 1719 ஆண்டிற்கு உட்பட்டவையாக இருக்கலாம் என  அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

மனித புதைகுழியிலிருந்து இதுவரை எடுக்கப்பட்ட மனித எலும்புகளில் சிலவற்றை ஆய்வு செய்த Beta Analytic ஆய்வுகூடம் இதனை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மன்னாரில் தோண்டியெடுக்கப்பட்டுகொண்டு இருக்கும் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எலும்புகள் 1404 முதல் 1450 ஆண்டிற்கு உட்பட்டவையாக இருப்பதற்கான 95 வீத சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது என அவ் ஆய்வுகூடம் தெரிவித்துள்ளதுள்ளதுடன்

அதேவேளை 1417 முதல் 1440 ஆண்டிற்கு உட்பட்டவையாக இருப்பதற்கான 68 வீத வாய்ப்புகள் உள்ளதாகவும்  Beta Analytic ஆய்வுகூடம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் புலோறிடா மாகானத்தில் இடம்பெற்ற கார்பன் மாதிரி பரிசோதனைகளின் சட்டபூர்வ முடிவுகளிளேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

371total visits,1visits today