பாராளுமன்றில் கடந்த அமர்வுகளில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களால் இலங்கையின் கலைத்துறை, சினிமாத்துறை மற்றும் கலைஞர்களின் நிலைமைகள் பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டன ,
அவற்றிட்கு இன்று பாராளுமன்றில் அமைச்சர் சஜித் பிரேமதாச பதில் அளிக்கையில்கடந்த அரசாங்கத்தினால் இல்லாமல் ஆக்கப்பட்ட கலை சம்பந்தமான பல்வேறு விடயங்களை தற்போதுள்ள அரசு மீண்டும் முன்னெடுத்து வருவதாக கூறியபோது எதிர்க்கட்சி தகைவர் மஹிந்த ராஜபக்ஸ எழுந்து தேர்தலுக்கு இன்னும் காலம் உண்டு என்று கூறினார்.

இதற்கு பதில் தெரிவித்த அமைசர் சஜித் பிரேமதாச ”நீங்கள் என்னை ஜனாதிபதியாக கற்பனை செய்து பார்ப்பீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை, எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது” என்று கூறியதுடன்
நான் இப்போது ஜனாதிபதி பற்றி எதுகும் பேசவில்லை தங்கள் காலத்தில் நடந்த அநீதிகள் சம்பந்தமாக தாங்கள் எழுப்பிய கேள்விக்கான பதில்தான் கூறினேன் ஆனால் அவற்றை கேட்க தங்களின் காதுகள் வலிக்கின்றன இருப்பினும் நான் அவற்றை சொல்லியே ஆக வேண்டும் என்றார்.

41total visits,2visits today