அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த இருபதுக்கு 20 தொடரை அவுஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்ற, இவ்விரு அணிகளுக்கிடையேயான ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி இன்று ஐதராபாத்தில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலாவதாக களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 236 ஓட்டங்களை குவித்தது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் உஷ்மன் கவாஜா 50 ஓட்டங்களையும், மெக்ஸ்வெல் 40 ஓட்டங்களையும், ஸ்டாய்னிஸ் 37 ஓட்டத்தையும், அலெக்ஸ் காரி 36 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சர்பில் மொஹமட் ஷமி, பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், கேதர் யாதவ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினார்.

இதையடுத்து 237 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி 48. 2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 6 விக்கெட்டுக்கிளனால் வெற்றியீட்டியது.

இந்திய அணி சார்பில் கேதர் யாதவ் 81 ஓட்டத்தையும், தோனி 59 ஓட்டத்தையும் விராட் கோலி 44 ஓட்டத்தையும், ரோகித் ஷர்மா 37 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் அடம் சாம்பா மற்றும் நெதன் கொல்டர்-நெல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளதுடன் இவ்விரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 05 ஆம் திகதி நாக்பூரில் ஆரம்பமாகிறது.

161total visits,1visits today