பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரின் ஜனாதிபதி வேட்பாளர் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மொரட்டுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்‌ஸ தூய்மையான நிர்வாகியாக தமது சேவையை ஆற்றினார் என்பதை முழுநாடும் அறிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு அஞ்சாத தரப்பே மஹிந்த ராஜபக்ஸ தரப்பாகும். இந்த நிலையில், ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவே முன்னிறுத்தப்பட வேண்டும் என நாட்டு மக்கள் கோருவதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

57total visits,1visits today