வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டும் என வலியுறுத்தி இதுவரை 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி அலையும் சங்கத்தின் செயலாளர் கே.ராஜ்குமார் தெரிவித்தார்.

மூன்று லட்சம் கையெழுத்துக்களை சேகரிக்கும் பணிகள் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழர் தாயகத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் கையளித்தும் கடத்தப்பட்டும், கைதுசெய்யப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி அவர்களின் உறவுகள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

229total visits,1visits today