நீர்கொழும்பு – கொச்சிக்கடை பகுதியில்  ஹசிஸ் போதைப்பொருளுடன் 3 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேலியகொடை வடக்கு குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் மினுவாங்கொட, ஹொரண மற்றும் முனமல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

 

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 7.8 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 600 கிராம் ஹசிஸ் போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத்தாலியில் இருந்து விமான தபால் மூலம் பொதியில் அனுப்பப்பட்ட பொருட்களுக்குள்ளேயே குறித்த போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளது.

சந்தேக நபர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நீர்கொழும்புபொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

23total visits,1visits today