ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் பொகவந்தலாவ செப்பல்டன் பகுதியில் புதன்கிழமை (27.02.2019) இரவு வீதி ஓரமாக நிறுத்தி வைக்கபட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அரச பேருந்தின் மீது மோதிவிட்டு சென்ற லொறி வண்டியையும், குறித்த சந்தேக நபரையும் பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கைது சம்பவம் இன்று வியாழகிழமை 11.30மணி அளவில் இடம் பெற்றதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, பாலாங்கொடை பகுதியில் இருந்து அட்டன் பகுதியை நோக்கி பயணித்த சிறிய ரக லொறி வண்டியே இவ்வாறு நிறுத்திவைக்கபட்டிருந்த பேருந்து மீது மோதிவிட்டு சென்றமையினால் அரசபேருந்துக்கும் லொறிவண்டிக்கும் பகுதி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் அரச பேருந்தின் சாரதி பொகவந்தலாவ பொலிஸ்நிலையத்தில் முறைபாட்டினை பதிவு செய்துள்ளதோடு பதிவு செய்யபட்ட முறைபாட்டுக்கு அமைய விசாரனைகளை மேற்கொண்ட பொகவந்தலாவ பொலிஸார் பேருந்தை சேதபடுத்தியவர் தொடர்பில் விசாரனைகளை மேற்கொண்ட போது குறித்த லொறிவண்டியின் சாரதியின் கையடக்க தொலைபேசியை தவறவிட்டு சென்றுள்ளதாகவும், தவறவிட்ட கையடக்க தொலைபேசியை குறித்த லொறி வண்டியின் சாரதி தேடும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது குறித்த நபர் கைது செய்யபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், லொறி வண்டியின் சாரதிக்கு நித்திரை ஏற்பட்ட காரணத்தினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

 

22total visits,1visits today