3 தடைவைகள் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. அப்போது நள்ளிரவு வேளை. வீட்டுக்கு வெளியே செல்ல அச்சம் ஏற்பட்டதால் என்ன நடந்தது தெரியவில்லை. பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதை காலையில்தான் அறிந்துகொண்டேன்”

இவ்வாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அண்மையாக உள்ள வீட்டில் வசிப்பவர் சாட்சியமளித்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20 ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பொலிஸ் மா அதிபர் பாரப்படுத்தினார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகள் உடனடியாக ஆரம்பித்து, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உள்பட 5 பொலிஸாரைக் கைது செய்தனர்.

அவர்கள் ஐவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். 5 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் ஐவரும் பொலிஸ் சேவையில் மீளவும் இணைக்கப்பட்டுள்ளனர்.

27total visits,1visits today